Latestஉலகம்

ஐக்கிய அரபு சிற்றரசில் வெள்ளப் பேரிடருக்குப்பின் விமான சேவைகள் வழக்க நிலைக்கு திரும்பின

ரியாத், ஏப் 21 – ஐக்கிய அரபு சிற்றரசில் இவ்வார தொடக்கத்தில் பெய்த கடுமையான மழையைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டிருந்த Dubai விமான நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனமான Flydubai விமானங்கள் மீண்டும் வழக்கமான சேவைக்கு திரும்பியுள்ளன. செவ்வாய்க்கிழமையன்று Dubai நகர் புயல் தாக்குதலுக்கு உள்ளானதைத் தொடர்ந்து ஐக்கிய அரபு சிற்றரசிற்கான குறைந்தது 400 விமான சேவைகள் ரத்துச் செய்யப்பட்டன மற்றும் பல விமான சேவைகள் தாமதப்படுத்தப்பட்டதாக விமான நிறுவனத்தின் தலைவர் Tim Clark வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.

புயலின் தாக்கத்தினால் Dubai யிலிருந்து வெளியேறும் பயணிகளுக்கான பரிசோதனை முகப்பிட சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதோடு Dubai அனைத்துலக விமான நிலையத்தின் Transit சேவையும் நிறுத்தப்பட்டதால் உலகளாவிய நிலையிலான அந்த விமான நிலையத்தின் சேவை பாதிக்கப்பட்டதோடு ஆயிரக்கணக்கான பயணிகள் தங்களது பயணத்தை தொடரமுடியாத சூழ்நிலைக்கு உள்ளாகினர். அந்த விமான நிலையத்தின் டாக்சி பாதைகளில் வெள்ளம் ஏற்பட்டதை தொடரந்து விமானங்கள் வேறு விமான நிலயத்திற்கு திருப்பிவிடப்பட்டதோடு பல விமான சேவைகள் தாமதப்படுத்தப்பட்டன. பல விமானச் சேவைகளும் ரத்துச்செய்யப்ப்டடன. பாதிக்கப்பட்ட விமானப் பயணிகள் தங்குவதற்காக 12,000 ஹோட்டல் அறைகள் மற்றும் 250,000 உணவு வவுச்சர்களை Emirates விமான நிறுவனம் வழங்கியதாக Clark தெரிவித்தார். Dubai மற்றும் Abu Dhabi யில் சில சாலைகளில் இன்னமும் வெள்ள நீர் காணப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!