Latestமலேசியா

கள்ளக்குடியேறிகளை நாட்டுக்குள் கடத்திக் கொண்டு வரும் கும்பல் கிளந்தானில் முறியடிப்பு

கோத்தா பாரு, ஜூன்-15 – கிளந்தான் குடிநுழைவுத் துறை மேற்கொண்ட அதிரடிச் சோதனையில் கள்ளக் குடியேறிகளைக் கடத்திக் கொண்டு வரும் கும்பலொன்றின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டுள்ளது.

அக்கும்பல், தங்கியிருந்த இடத்தில் ஜூன் 10-ஆம் தேதி மேற்கொண்ட சோதனையின் போது சிலர் கைதாகி, உடன் கிடைத்த தகவல்கள் அடிப்படையில் Lembah Sireh விரைவுப் பேருந்து முனையத்திலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது பேருந்துக்காகக் காத்திருந்த கள்ளக்குடியேறிகளான 17 ஆண்களும் 7 பெண்களும் கைதாகினர்.

அவ்விரு சோதனைகளிலும் மொத்தமாக 33 கள்ளக்குடியேறிகளும், அவர்களின் போக்குவரத்தைப் பார்த்துக் கொண்ட 2 உள்ளூர் ஆடர்களும் கைதாகினர்.

அதிகாரிகளின் கண்ணில் படாதவாறு அவர்களின் தங்குமிடத்தில் இருந்து மோட்டார் சைக்கிள்களில் ஏற்றி பேருந்து முனையத்திற்கு அவர்களை கொண்டு வந்து விடும் அளவுக்கு அக்கும்பலின் யுக்தி மாறியிருப்பதாக மாநில குடிநுழைவுத் துறைக் கூறியது.

அவர்களைக் கள்ளத்தனமாக நாட்டுக்குள் கொண்டு வர உதவ, அக்கும்பல், தலைக்கு இரண்டாயிரம் முதல் மூவாயிரம் ரிங்கிட் கட்டணம் வசூலிப்பதும் தெரிய வந்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!