Latestமலேசியா

கார் தடம்புரண்டு மின் கம்பத்தில் மோதியது; மூவர் பலி, ஒருவர் படுகாயம்

சிம்பாங் ரெங்கம், ஜூன்-28 ஜொகூர், சிம்பாங் ரெங்கத்தில் கார் தடம்புரண்டு மின் கம்பத்தை மோதி விபத்துக்குள்ளானதில் நண்பர்கள் மூவர் உயிரிழந்தனர்.

நேற்றிரவு 10.30 மணிக்கு நிகழ்ந்த அவ்விபத்தில் மேலும் ஒருவர் படுகாயமடைந்தார்.

21 வயது மொஹமட் சியாட் அஸ்மி (Mohamad Ziyad Azmi), அஹ்மாட் மனான் சாய்னி (Ahmad Manan Zaini) இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

அதே வயதுடைய முஹமட் அடிப் அஹ்மாட் ஷாஃபாரின் (Muhamad Adid Ahmad Shahfarin) மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் உயிரிழந்தார்.

காயமடைந்த 21 வயது நோர் அமினுல் ஃபித்ரி நோர் அஸ்மி (Nor Aminul Fitri Nor Azmi) அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டார்.

விபத்துக்கான காரணம் இன்னும் தீயணைப்பு மீட்புத் துறையின் விசாரணையில் உள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!