Latestமலேசியா

முதலை வாயில் சிக்கிய 14 வயது சிறுவனின் சடலம் மீட்பு!

சரவாக், அக்டோபர் 28 – சரவாக் செபுயாவ் (Sebuyau), உலு சுங்கை பிளாயே (Ulu Sungai Plaie) பகுதியில் முதலை தாக்கியதாகக் கூறப்பட்டு காணாமல் போன 14 வயது சிறுவனின் சடலம் நேற்று இரவு கிராம மக்களால் கண்டெடுக்கப்பட்டது.

முகமது நோர்டின் முகமது ஒத்மான் (Mohd Nordin Mohd Othman) என அடையாளம் காணப்பட்ட அந்தச் சிறுவன், கம்புங் பிளாயே உலு (Kampung Plaie Ulu) பகுதியைச் சேர்ந்தவர்.

நேற்று மாலை 6 மணியளவில், பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்தினரைச் சந்தித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்த கம்புங் துபா (Kampung Tuba) கிராம மக்கள், முதலை ஒன்று தனது வாயில் ஏதோ ஒன்றைச் சுமந்து செல்வதைக் கண்டனர். இதையடுத்து, இரவு 8 மணியளவில் மீண்டும் அந்த இடத்திற்குச் சென்ற கிராம மக்கள், கிராமப் படகுத்துறையிலிருந்து சுமார் 800 மீட்டர் தொலைவில் சிறுவனின் சடலத்தைக் கண்டெடுத்தனர்.

சடலத்தை அடையாளம் காணும் பணியைச் சிறுவனின் தாத்தா மேற்கொண்டார். முதற்கட்டப் பரிசோதனையில், சிறுவனின் இரு கைகளும் இடது காலின் ஒரு பகுதியும் காணாமல் போயிருந்ததுடன், உடலின் பல்வேறு பகுதிகளில் முதலை கடித்த காயங்களும் கண்டறியப்பட்டன.

தேடுதல் மற்றும் மீட்புப் பணியில் எட்டு போலீஸார் மற்றும் சுமார் 20 கிராம மக்கள் ஈடுபட்டனர். சிமுஞ்சான் (Simunjan) தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினரின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை இன்று அதிகாலை 4 மணியளவில் நிறைவடைந்தது. பின்னர், போலீஸார் சிறுவனின் சடலத்தை மேல்நடவடிக்கைக்காக சிமுஞ்சான் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!