Latestமலேசியா

கிராமப்புற மாணவர்களின் SPM தேர்ச்சி விகிதம் 92.9 விழுக்காடாக உயர்வு

கோலாலம்பூர், அக்டோபர் 28- மலேசியாவில் கிராமப்புற மாணவர்களின் SPM தேர்ச்சி விகிதம் 2024ஆம் ஆண்டின் 92.31 விழுக்காட்டிலிருந்து, 2025ஆம் ஆண்டில் 92.9 விழுக்காடாக உயர்ந்துள்ளது.

நகர்ப்புற மற்றும் கிராமப்புறப் பள்ளிகளின் சராசரி SPM மதிப்பெண்களுக்கு இடையிலான இடைவெளி, 2012ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 32.79 சதவீதம் குறைந்துள்ளதாகக் கல்வித் துணை அமைச்சர் வோங் கா வோ (Wong Kah Woh) தெரிவித்தார். மாணவர்கள் மற்றும் மாணவிகளின் தேர்ச்சி விகித இடைவெளியும் 2024ஆம் ஆண்டின் 5.95 விழுக்காட்டிலிருந்து, 2025ஆம் ஆண்டில் 5.32 விழுக்காடாக குறைந்துள்ளது.

மேலும், வாசிப்பு, எழுத்து மற்றும் கணிதத் திறன்களில் (3M) பின்தங்கிய முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்ட தலையீட்டுத் திட்டங்களால், அத்தகைய மாணவர்களின் எண்ணிக்கை 2024ஆம் ஆண்டில் 76,762 ஆக இருந்த நிலையில், 2025ஆம் ஆண்டில் 48,636 ஆகக் குறைந்துள்ளது.

கல்வி வாய்ப்புகளில் நிலவும் நகர்ப்புற–கிராமப்புற மற்றும் சமூகப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்கவும் கல்வி அமைச்சு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!