Latestஉலகம்

கிரேட் எஸ்கேப் ; சீனாவில், கூண்டின் கதவை சாத்த மறந்ததால், நூற்றுக்கணக்கான ‘ஹஸ்கிகள்’ தப்பியோட்டம்

பெய்ஜிங், ஏப்ரல் 4 – செல்லப் பிராணிகள் பராமரிப்பு மையத்திலுள்ள, கூண்டின் கதவை மூட மறந்ததால், சுமார் 100 ஹஸ்கி நாய்கள் தப்பியோடிய சம்பவம், சமூக ஊடக பயனர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

தென்கிழக்கு சீனா, குவாங்டாங் மாநிலத்திலுள்ள, பேரங்காடி ஒன்றில், மார்ச் 12-ஆம் தேதி, அச்சம்பவம் நிகழ்ந்தது.

தனது நாயை காண வந்த வாடிக்கையாளர், அங்கிருந்து வெளியேறும் போது, கூண்டின் கதவை சாத்த மறந்து விட்டதாக கூறப்படுகிறது.

அதனால், பரவசம் அடைந்த, சுமார் 100 ஹஸ்கி நாய்கள், பேரங்காடியில் தலை தெறிக்க ஓடும் காணொளி வைரலாகியுள்ளது.

அதன் பின்னால், சம்பந்தப்பட்ட பராமரிப்பு மையத்தின் பணியாளர்கள் ஓடும் காட்சிகளும் அதில் இடம் பெற்றுள்ளன.

எனினும், அவர்களின் சாதுர்யமான நடவடிக்கையால், தப்பிச் சென்ற ஹல்கி நாய்கள் அனைத்தும் மீண்டும் பிடிபட்டன.

எனினும், அச்சம்பவம் இணைய பயனர்களை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளது.

“கிரேட் எஸ்கேப்” என அதில் ஒருவர் பதிவிட்டுள்ள வேளை ; “அவை மகிழ்ச்சியாக காணப்படுகின்றன” என மற்றொருவர் குறிப்பிட்டுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!