பாசீர் மாஸ், டிசம்பர்-1,கிளந்தான் பெருவெள்ளத்தின் மூன்றாவது பலியாக, 1 வயது ஆண் குழந்தை தும்பாட்டில் வெள்ளமேறிய வீட்டில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளது.
வியாழக்கிழமை இரவு 10.30 மணியளவில் Chabang Empat, Kampung Cherang Melintang-கில் உள்ள வீட்டில், அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த போது அத்துயரம் நிகழ்ந்தது.
தூக்கத்திலிருந்து திடீரென விழித்துக் கொண்ட 41 வயது தாய் குழந்தையைக் காணாது தேடியிருக்கிறார்; ஆனால் கிடைக்கவில்லை.
அப்போது தான், இரண்டு மாடி வீட்டின் மேல்தளத்திற்கான படியில் தடுப்பாகப் போடப்பட்ட ஃசோபா மேசை தள்ளப்பட்டிருப்பதை அவர் கண்டார்.
உடனே சந்தேகத்தில் வீட்டின் கீழ்தளத்தில் பார்த்த போது, அந்த ஆண் குழந்தை இறந்துபோய் வெள்ள நீரில் மிதந்துகொண்டிருந்தது.
உடனடியாக படகில் ஏற்றி தும்பாட் மருத்துமனைக்குக் கொண்டுச் சென்ற போது, குழந்தை இறந்து விட்டது உறுதிபடுத்தப்பட்டது.
கிளந்தானில் முன்னதாக 35 வயது ஆடவர் பாசீர் பூத்தேவிலும், 64 வயது முதியவர் மாச்சாங்கிலும் வெள்ளத்தில் மூழ்கி பலியாயினர்.