ஜாசின், ஜூன்-14, மலாக்கா, மெர்லிமாவில் தனியார் கிளினிக்கில் பணிபுரியும் பெண்ணிடம் பாலியல் ரீதியாக தகாத முறையில் நடந்தக் கொண்ட சந்தேகத்தின் பேரில் மருத்துவர் கைதாகியுள்ளார்.
29 வயது அவ்வாடவர் இன்று அதிகாலை கைதானதை ஜாசின் மாவட்ட போலீஸ் உறுதிபடுத்தியது.
கிளினிக்கில் வைத்து அம்மருத்துவர் தன்னை மானபங்கம் படுத்தியதாக அதிகாலை 2.24 மணிக்கு 19 வயது அப்பெண் மெர்லிமாவ் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
கடந்தாண்டு செப்டம்பர் முதல் அந்த கிளினிக்கில் வேலை செய்து வரும் அம்மருத்துவர், புகார்தாரரான பெண்ணிடம் பேசிக் கொண்டிருந்த போது தனது ஆபாச சேட்டையைக் காட்டியிருக்கிறார்.
அப்போது அங்கு இன்னொரு பணியாளர் இருந்ததாகவும், ஆனால் நடந்தவற்றை அவர் கவனிக்கவில்லை என்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தமக்கெதிராக போலீசில் புகார் செய்யப்பட்டதை தெரிந்துக் கொண்ட அந்நபர் அந்த விடியற்காலையிலேயே சரணடையச் சென்ற போது, போலீஸ் அவரைக் கைதுச் செய்தது.
இதையடுத்து 3 நாட்கள் தடுத்து வைத்து அவரை விசாரிக்க நீதிமன்ற ஆணைப் பெறப்பட்டுள்ளது.