கிள்ளான், ஜூலை 4 – கடந்த 2021 முதல் 2023ஆம் ஆண்டு வரை, கிள்ளானில் பதிவான குடும்ப வன்முறை புகார்களில் 46 விழுக்காடு இந்தியர்களாகும்.
இத்தகவலை மகளிர், குடும்பம், சமுதாய மேம்பாட்டு அமைச்சர் நேன்சி சுக்ரி இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதிராவ் முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்விவரங்களை வெளியிட்டார்.
இந்தக் காலக்கட்டத்தில் நாட்டில் 2794 குடும்ப வன்முறை புகார்கள் பதிவாகியுள்ளன. அதில் ஆக அதிகமாக 773 புகார்கள் சிலாங்கூரில் பதிவாகிய நிலையில் கிள்ளான் வட்டாரத்தில் மட்டும் 81 புகார்கள் வந்துள்ளன.
அந்த 81 புகார்களில் 37 புகார்கள் அல்லது 46 விழுக்காடு புகார்கள் இந்தியர்களுடையது. 23 புகார்கள் மலாய்க்காரர்கள், 9 புகார்கள் சீனர்கள். எஞ்சிய 6 மற்றும் 4 புகார்கள் முறையே வெளிநாட்டினர் மற்றும் இதர சமுதாயத்தினர் என நேன்சி சுக்ரி பேசியுள்ளார்.
இதனிடயே இவ்விவகாரம் குறித்து இதற்கான காரணங்களக் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராவ்விடம் வணக்கம் மலேசியா தொடர்புக் கொண்டு வினவியப்போது
இப்பிரச்ச்சனைகளை சமாளிப்பதற்கு அமைச்சின் ஒத்துழைப்பு இன்னும் அதிகமாக தேவைப்படுவதாகவும் அவர் விவரித்தார் .
அமைச்ச்தின் ஆக்கரமான தலையீட்டால் குடும்ப வன்முறையில் பாதிக்கப்படுவோருக்கு நிவரணம் கிடைக்கும் வாய்ப்புஅதிகரிக்கும் என கணபதிராவ் நம்பிக்கை தெரிவித்தார்.