Latestமலேசியா

குடும்ப கார் விற்கப்பட்டதால் 4 வயது சிறுவன் வருத்தம் ; உண்டியல் பணத்தை கொண்டு மீண்டும் வாங்க முயற்சி

கோலாலம்பூர், மே 23 – குடும்ப கார் விற்கப்பட்டதால், மனமுடைந்த நான்கு வயது ஜோசுவா எனும் சிறுவன், அழுது புலம்பும் காணொளி ஒன்று டிக் டொக்கில் வைரலாகியுள்ளது.

அந்த காணொளியை, ஜோசுவாவின் தாயான மெலிசா எனும் பெண் தனது டிக் டொக் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

COE எனும் சிங்கப்பூர் வாகன உரிமை சான்றிதழை புதுப்பிக்க முடியாமல் போனதால், மெலிசாவின் குடும்பத்தார், அவர்களின் கருமை நிற BMW ஆடம்பரக் காரை விற்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

அதனை அறிந்த ஜோசுவா, காரை விற்க வேண்டாம் என அழுது புலப்பியதோடு, உண்டியல் காசை தந்து அந்த காரை மீண்டும் வாங்குமாறு கோறியதாக மெலிசா தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

“சிங்கப்பூர் வாகன உரிமை சான்றிதழ் கொள்கை எனது மகனை அழ வைத்து விட்டது” என மெலிசா தனது பதிவுக்கு தலைப்பிட்டுள்ளார்.

சிங்கப்பூரில் ஒரு முறை மட்டும் தான், அதாவது ஐந்தாண்டு அல்லது பத்தாண்டுகளுக்கு மட்டுமே அந்த சான்றிதழை புதுப்பிக்க முடியும்.

கடந்த 11 ஆண்டுகளாக மெலிசாவின் குடும்பத்தார் அக்காரை வைத்திருக்கும் வேளை ; பிறந்ததில் இருந்து அதனை பார்த்து வளர்ந்த ஜோசுவாவுக்கு அக்காருடன் நெருக்கம் அதிகம்.

அதனால், அக்காரை விட முடியாமல் கனத்த இதயத்தோடு ஜோசுவா அதற்கு விடை கொடுத்ததாக மெலிசா பகிர்ந்துள்ளார்.

எனினும், தற்போது ஜோசுவா நலமாக இருக்கும் வேளை ; மெலிசாவின் குடும்பத்தார் வாங்கி இருக்கும் புதிய ஹேண்டா காரை, ஜோசுவாவுக்கு 12 வயது வரை முறையாக பராமரிக்க போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!