Latestமலேசியா

கடுமையான மழையைத் தொடர்ந்து பேராவில் பல இடங்களில் திடீர் வெள்ளம்

ஈப்போ, மே 23 – புதன்கிழமை மாலையில் கடுமையாக பெய்த மழையைத் தொடர்ந்து பேரா மாநிலத்தில் பல இடங்களில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. Kinta, Perak Tengah , Manjung போன்ற இடங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டதாக பேரா தீயணைப்பு மற்றும் மீட்பு நடவடிக்கை பிரிவின் துணை இயக்குனர் Sabarodzi Nor Ahmad தெரிவித்தார். Perak Tenghah வில் Kampung Serapoh மற்றும் Kampung Buloh Akar ரில் 73 குடும்பங்களைச் சேர்ந்த 209 பேர் Simpang தீக்கா தேசிய பள்ளியில் நிவாரண மையத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டனர். இதனிடையே Pengkalan Pegoh வில் வீசிய புயலைத் தொடர்ந்து பல வீடுகளில் கூரைகளும் பறந்து சென்றதாக Kinta மாவட்ட நடவடிக்கை மையத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!