
ரானாவ், ஏப்ரல்-21-சபாவின் குண்டாசாங் மற்றும் ரானாவில் இன்று அதிகாலை 3 மணியளவில் இலேசான நில அதிர்வு உணரப்பட்டது.
இது ரிக்டர் அளவில் 3.4 ஆகப் பதிவாகியது.
மலேசிய வானிலை ஆராய்ச்சி மையமான MET Malaysia தகவல்படி, இந்த நில அதிர்வு ரானாவிலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவிலும், 10 கிலோ மீட்டர் ஆழத்திலும் மையம் கொண்டிருந்தது.
எனினும், இதனால் சுனாமி அபாயம் ஏதுமில்லை.
சம்பவ இடம் விரைந்த தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் மேற்கொண்ட ஆய்வில், இதுவரை எந்தவோர் உயிரிழப்போ, காயங்களோ அல்லது கட்டட பாதிப்புகளோ ஏற்படவில்லை என்பதும் உறுதிச் செய்யப்பட்டுள்ளது.
நிலைமை தற்போது முழுமையாகக் கட்டுப்பாட்டில் உள்ளதால், பொது மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும், நில அதிர்வு குறித்து வரும் அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டும் பின்பற்றுமாறும் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.



