Latestஇந்தியா

மதுரையில் நகைக்கடை கொள்ளை; பிரபல இன்ஸ்டாகிராம் பெண் கைது

மதுரை, நவம்பர்-15,தமிழகத்தின் மதுரையில், பிரபல நகைக்கடையில் நிகழ்ந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான நகைக் கொள்ளை தொடர்பாக, சமூக ஊடகப் பிரபலமான மீனாட்சி என்ற பெண் கைதுச் செய்யப்பட்டுள்ளார்.

மதுரையில் உள்ள தனிஷ்க் நகைக்கடையில், சுமார் பத்தரை கிலோ தங்க நகைகளும், ஒரு கிலோ வைர நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டன.

இந்தக் கொள்ளையின் முக்கிய சந்தேக நபரான நிஷாந்த், நகைக்கடைக்கு பலமுறை சென்று, கொள்ளைக்குத் திட்டமிட்டதாகப் போலீஸ் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நிஷாந்தின் நெருங்கிய தோழியும், இன்ஸ்டாகிராமில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பின்தொடர்பாளர்களைக் கொண்டவருமான மீனாட்சி கைதுச் செய்யப்பட்டுள்ளார்.

கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் எங்கு மறைத்து வைக்கப்பட்டுள்ளன என்பது மீனாட்சிக்குத் தெரிந்திருந்ததாகப் போலீஸ் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அவர் வழங்கிய தகவலின் அடிப்படையில், தனிமையான பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 5 கிலோவுக்கும் அதிகமான நகைகள் மீட்கப்பட்டுள்ளன.

இந்த வழக்கில் நிஷாந்தின் தந்தையும் கைதாகியுள்ளார்.

தலைமறைவாக உள்ள நிஷாந்தைப் பிடிக்க 9 சிறப்புப் போலீஸ் குழுக்கள் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!