Latestமலேசியா

குவாந்தானில் இல்லத்தரசி இறந்து கிடந்தார்; மாமனார்-மாமியார் உள்ளிட்ட நால்வர் விசாரணைக்காகத் தடுத்து வைப்பு

குவாந்தான், ஆகஸ்ட்-17, பஹாங், இண்ட்ரா மக்கோத்தாவில் 28 வயது பெண் காணாமல் போய், கழுத்து நெரிக்கப்பட்ட தழும்புகளுடன் வீட்டின் படுக்கையறையில் இறந்து கிடந்த சம்பவத்தில், வீடுடைக்கப்பட்ட தடயங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை.

ஆனால் அந்த இல்லத்தரசியின் கைப்பேசியும் கார் சாவியும் காணாமல் போயிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக, குவாந்தான் மாவட்ட போலீஸ் தலைவர் (Wan Mohd Zahari Wan Busu) தெரிவித்தார்.

வீட்டில் பொருத்தியிருந்த CCTV கேமராவையும் காணவில்லை; சந்தேக நபர் அதைக் கழற்றி கையோடு கொண்டுச் சென்றிருக்க வேண்டுமென அவர் சொன்னார்.

எனினும் இறந்து போன பெண்ணின் மற்ற தனிப்பட்ட பொருட்கள் எதுவும் தொடப்படவில்லை.

சந்தேக நபரை அடையாளம் கண்டு, சம்பவத்திற்கான காரணத்தைக் கண்டறிய ஏதுவாக குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களிடம் தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இறந்து போன பெண்ணின் சீன நாட்டு கணவர், தந்தை, மாமனார் மாமியார் என நால்வர் ஆகஸ்ட் 21 வரை விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

மனைவி சுயநினைவற்ற நிலையில் கிடப்பதை
புதன்கிழமை இரவு 7.30 மணியளவில் கணவர் கண்டறிந்துள்ளார்.

அதற்கு முன்பாக பிற்பகல் 3.25 மணிக்கு மகளைக் காணவில்லை எனக் கூறி அப்பெண்ணின் 62 வயது தந்தை போலீசில் புகார் செய்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!