Latestமலேசியா

கூலாயில் சாலையில் தகராறில் ஈடுபட்ட குற்றத்தை ஒப்புக் கொண்ட ஆடவருக்கு 1,000 ரிங்கிட் அபராதம்

கூலாய், ஜூன் 13 – கூலாய் Jalan Persiaran Sri Putri Utama-வில் மற்றொரு கார் ஓட்டுனருடன் முரட்டுத்தனமாக நடந்துகொண்டதை ஒப்புக்கொண்ட ஆடவர் ஒருவருக்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் 1,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மணி 2.42 அளவில் Honda City காரை ஓட்டிச் சென்ற 33 வயது ஆடவர் வேன் ஓட்டுனர் ஒருவரிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதை ஒப்புக் கொண்டதாக கூலாய் மாவட்ட போலீஸ் தலைவர் Superintenden டான் செங் லீ (Tan Seng Lee) தெரிவித்தார். இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட வேன் ஓட்டுனர் அன்றைய தினமே புகார் செய்தார். முகத்தினால் தாக்கப்பட்டதால் உதட்டில் காயம் ஏற்பட்டதோடு கன்னமும் வீங்கியதாக பாதிக்கப்பட்ட உள்நாட்டைச் சேர்ந்த 34 வயது ஆடவர் கூறியிருந்தார். அன்றைய தினம் இரவு மணி 8.30 அளவில் சாலையில் நடைபெற்ற பகடிவதை தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலானது.

அதோடு தகராறில் ஈடுபட்ட நபர் தம்மை ஒரு போலீஸ்காரரின் மகன் என்று கூறிக்கொண்டார். ஆனால் போலீஸ் நடத்திய விசாரணையில் அது உண்மையில்லை என்றும் தெரியவந்தது. Taman Gunung Pulai முச்சந்தியில் வெளியேறி வேன் ஓட்டுனர் சந்தேகப் பேர்வழியின் காரில் மோதும் சூழ்நிலை ஏற்பட்டதால் அவர்களுக்கிடையே ஏற்பட்ட தவறான புரிந்துணர்வே இந்த தகராறுக்கு காரணம் என விசாரணையில் தெரியவந்ததாக டான் செங் லீ வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!