Latestமலேசியா

கேலிச் சித்திர புத்தகத்தைத் தடைச் செய்யக் கோருவதா? வேறு ஏதாவது முக்கிய வேலை இருந்தால் பாருங்கள்- அம்னோ இளைஞர் பிரிவை சாடிய சாயிட் இப்ராஹிம்

கோலாலம்பூர், ஆகஸ்ட்-14, கம்யூனிஸ சிந்தாந்தத்தை விளம்பரப்படுத்துவதாகக் கூறப்பட்ட கேலிச் சித்திர புத்தகத்திற்கு விதிக்கப்பட்ட தடை மீட்டுக் கொள்ளப்பட்டிருப்பது குறித்து, அம்னோ இளைஞர் பிரிவு எதிர்மறை கருத்துகளை வெளியிடுவது தேவையற்றது.

கருத்துரைக்க அதை விட எவ்வளவோ பெரிய விஷயங்கள் இருக்கின்றன என முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சாயிட் இப்ராஹிம் (Zaid Ibrahim) சாடியுள்ளார்.

பெரும்பான்மை மக்களின் உணர்வுகளைப் பாதுகாப்பதில் அம்னோ இளைஞர் பிரிவு உண்மையிலேயே அக்கறைக் கொண்டிருந்தால், முஸ்லீம் கணவன்மார்கள் வீடியோ அல்லது WhatsApp வாயிலாக மனைவியரை விவாகரத்துச் செய்வதை தடைச் செய்ய வலியுறுத்த வேண்டும்.

அதை விடுத்து சாதாரண விஷயங்களில் நேரத்தையும் சக்தியையும் விரயமாக்குவதை அம்னோ இளைஞரணி தவிர்க்கலாமென, தனது X தள பதிவில் சாயிட் ஆலோசனைக் கூறினார்.

DAP கட்சியின் முன்னாள் உறுப்பினர் Hew Kuan Yau-வின் கேலிச் சித்திர புத்தகமான “Belt and Road Initiative for Win-Winism” மீது விதிக்கப்பட்டிருந்த தடையை, நீதிமன்ற முடிவுக்கு ஏற்ப உள்துறை அமைச்சு நேற்று மீட்டுக் கொண்டிருந்தது.

அது குறித்து அதிருப்தி தெரிவித்திருந்த அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் Dr அக்மால் சாலே (Dr Akmal Salleh), அத்தடை ரத்தானதை எதிர்த்து அரசாங்கம் மேல்முறையிடு செய்ய வேண்டுமென வலியுறுத்தினார்.

KDN-னின் அந்த தடை மீட்பு உத்தரவு, மலாய், ஆங்கிலம், மாண்டரின் ஆகிய மும்மொழிகளில் வெளியான கேலிச் சித்திரப் புத்தகங்களை உட்படுத்தியுள்ளது.

கம்யூனிசம் மற்றும் சோசலீச சிந்தாந்தங்களைப் பிரபலப்படுத்தும் அம்சங்களைக் கொண்டிருப்பதாகக் கூறி, 2019-ல் அக்கேலிச் சித்திர புத்தகத்துக்கு தடை விதிக்கப்பட்டது

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!