
கோலாலாம்பூர், ஏப்ரல்-20,
கையால் எழுதப்பட்ட அல்லது மங்கிய நிலையில் உள்ள பழைய பிறப்புச் சான்றிதழ்கள் இனி அதிகாரப்பூர்வ அரசாங்க அலுவல்களுக்கு ஏற்றுக்கொள்ளப்படாது.
எனவே, பொது மக்கள் தங்களது பழையச் சான்றிதழ்களை உடனடியாகப் புதிய வடிவத்திற்கு, தேசியப் பதிவிலாகாவான JPN-மில் மாற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முக்கியமான ஆவணச் சரிபார்ப்பு மற்றும் அரசாங்கச் சேவைகளுக்காகச் செல்லும் போது மட்டுமே பலரும் இந்த மாற்றத்தை உணருவதாக, வைரலாகியுள்ள ஒரு தகவல் தெரிவிக்கிறது.
அதன்போது, பழையச் சான்றிதழ்களை வைத்திருப்பவர்கள், அவற்றை மாற்றிய பின்னரே மற்ற விண்ணப்பங்களைத் தொடர முடியும் என அதிகாரிகள் தரப்பில் அறிவுறுத்தப்படுகிறது.
இந்த மாற்றத்தைச் செய்வதற்கு ஒவ்வொரு சான்றிதழுக்கும் வெறும் 5 ரிங்கிட் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
விண்ணப்பதாரர்கள் அசல் பிறப்புச் சான்றிதழ் மற்றும் MyKad அடையாள அட்டையின் ஒரு நகலை எடுத்துக் கொண்டு, அருகிலுள்ள JPN கிளை அல்லது UTC மையத்திற்குச் சென்று இதனை எளிதாகச் செய்துகொள்ளலாம்.
அதிகாரப்பூர்வ ஆவணங்களைப் புதுப்பிப்பதன் மூலம் உங்கள் உரிமைகளையும் சலுகைகளையும் தடையின்றிப் பெறுவதை நீங்கள் உறுதிச் செய்யலாம்..



