Latestமலேசியா

கோவிட்-19 தொற்றினால் சாட்சி தனிமைப் படுத்தப்பட்டார்; நஜீப் மீதான விசாரணை முன்கூட்டியே முடிந்தது

கோலாலம்பூர், டிச, 15 – முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கின் 2 பில்லியன் ரிங்கிட்டிற்கும் அதிகமான 1MDB நிதி முறைகேடு தொடர்பான வழக்கு விசாரணை இன்று முன்கூட்டியே முடிவுக்கு வந்தது.

1MDB விசாரணையில் சாட்சியமளிக்க உயர்நீதிமன்றத்தில் ஆஜராகத் திட்டமிடப்பட்டிருந்த மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்.ஏ.சி.சி.) விசாரணை அதிகாரி நூர் ஐடா அரிஃபின் கோவிட் தொற்றின் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருப்பதால் இன்று சாட்சியம் வழங்க வரமாட்டார் என டி.பி.பி கமல் பஹாரின் இன்று காலையிலேயே நீதிபதியிடம் தெரிவித்திருந்தார்.

திங்கட்கிழமை வரை நூர் ஐடா தனித்திருக்கும் நடவடிக்கைக்கு தன்னை உட்படுத்திக்கொண்டிருப்பார் என்பதால் எதிர்வரும் திங்கட்கிழமையும் அவர் விசாரணையில் கலந்துகொள்ள முடியாது என கமல் பஹாரின் உறுதிப்படுத்தினார்.

இதனால் திங்கட்கிழமையன்று சாட்சியம் அளிப்பதற்கு அழைக்கப்படவிருந்த அரசு தரப்பின் 47-ஆவது சாட்சியும் கோவிட் தொற்று தொடர்பான கண்காணிப்பில் இருப்பதாக DPP தெரிவித்தார். இதனை தொடர்ந்து, இந்த வழக்கை நாம் ஒத்திவைக்கலாம் என உயர்நீதிமன்ற நீதிபதி டத்தோ கொலின் லாரன்ஸ் சீக்வேரா தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!