Latestமலேசியா

அதிக குரங்கு அம்மை பாதிப்புள்ள நாடுகளிலிருந்து திரும்பி வரும் கிளந்தான் வாசிகள், மாநிலச் சுகாதாரத் துறைக்குச் செல்ல வலியுறுத்தல்

கிளந்தான், செப்டம்பர் 18 – ஆப்பிரிக்க நாடான காங்கோ உட்பட அதிக குரங்கு அம்மை பாதிப்புள்ள நாடுகளிலிருந்து திரும்பும் கிளந்தான் வாசிகள், உடனடியாக Mpox கண்காணிப்பை மேற்கொள்ள மாநில சுகாதாரத் துறைக்குச் செல்ல அறிவுறுத்தப்படுகின்றனர்.

Rantau Panjang மற்றும் Bukit Bunga பாதுகாப்பு வளாகம் உள்ளிட்ட தனிமைப்படுத்தல் வளாகம், சுங்கத்துறை, குடிநுழைவுத்துறை, மாநில எல்லை சோதனை சாவடிகளிலும் இந்த Mpox கண்காணிப்பு நடத்தப்படுகின்றன.

இதுவரை கிளந்தானில் Mpox சம்பவங்கள் பதிவாகவில்லை என்றாலும், அதிக ஆபத்துள்ள நாடுகளுக்குப் பயணம் செய்தவர்கள், உடனடியாக மாநில சுகாதாரத் துறைக்குக் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

இதனிடையே, நேற்று நாட்டில் ஒரு குரங்கம்மை சம்பவம் கிளேட் 2 உருமாறியத் தொற்றைச் சுகாதார அமைச்சு அடையாளம் கண்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!