Latestமலேசியா

செராஸில், ரோஹிங்யா பெண், குழந்தை எரியூட்டப்பட்ட சம்பவம் ; 2 சந்தேக நபர்களை போலீஸ் அடையாளம் கண்டுள்ளது

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 13 – சிலாங்கூர்,செராஸில், ரோஹிங்யா பெண் ஒருவரும், அவரது இரண்டு வயது மகனும் பொது இடத்துல் எரியூட்டப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு மணி 10.30 வாக்கில், அச்சம்பவம் நிகழ்ந்தது.

மதரஸா வகுப்பிற்கு சென்றிருந்த தனது மூன்று மகன்களை அழைத்து வர சென்ற அசுமா எனும் பெண், அருகிலுள்ள விளையாட்டு பூங்காவில் தனது இரண்டு வயது மகனை தூக்கிக் கொண்டு நின்றிருந்த போது, மோட்டார் சைக்கிளில் அங்கு வந்த இரு அடையாளம் தெரியாத ஆடவர்கள் அவர் மீது பெட்ரோலை ஊற்றி எரியூட்டியதாக நம்பப்படுகிறது.

அசுமாவின் அலறல் சத்தம் கேட்டு உடனடியாக சம்பவ இடத்திற்கு ஓடிச் சென்ற அவரது 36 வயது கணவர் ஜாபர் சுல்தான் அஹ்மாட், அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் தீயை அணைத்ததோடு, அவர்களை அம்பாங் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.

அசுமா முகம் மற்றும் கைகளில் மோசமான தீப்புண் காயங்களுக்கு இலக்கான வேளை ; அவரது மகனின் நிலை சீராக இருப்பதாக ஜாபர் கூறியுள்ளார்.

இவ்வேளையில், அவர்களுக்கு எரியூட்டிய இரு சந்தேக நபர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதை செராஸ் போலீஸ் தலைவர் ஜாம் ஹலிம் ஜமலுடின் உறுதிப்படுத்தியுள்ளார்.

கடந்த 14 ஆண்டுகளாக மலேசியாவில் வசிக்கும் ஜாபர், ஐநாவின் அகதிகளுக்கான அட்டையை வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!