Latestமலேசியா

ஜோகூரில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு எதிரான சோதனையில் 184 பேர் கைது -கமிஷனர் M .குமார் தகவல்

ஜோகூர் பாரு, பிப் 19 -சனிக்கிழமை நள்ளிரவு முதல் ஞாயிற்றுக்கிழமை விடியற்காலை மணி 5 வரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் பல்வேறு குற்றங்கள் தொடர்பில் 184 தனிப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டதாக ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் கமிஷனர் M .குமார் தெரிவித்திருக்கிறார். அவர்களில் 21 க்கும் 64 வயதுக்கும் உட்பட 152 பெண்கள் மற்றும் 32 ஆண்களும் அடங்குவர். 162 வெளிநாட்டினருடன் போலீசாரின் தேடப்படுவோர் பட்டியலில் இடம்பெற்ற உள்நாட்டைச் சேர்ந்த 22 பேரும் அடங்குவர் என அவர் கூறினார்.

லைசென்ஸ் இன்றி செயல்பட்ட சந்தேகத்திற்குரிய பொழுதுபோக்கு நடவடிகைகளை மேற்கொண்டுவரும் மையங்கள், வெளிநாட்டு வேலைக்கார பெண்களுக்கான சேவையை நடத்தும் மையங்கள் மற்றும் போதைப் பொருள் நடவடிக்கையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராகவும் சோதனை மேற்கொள்ளப்பட்டன. பல்வேறு DVD சாதனங்கள், amplifiers , மடிக்கணினிகள், ஸ்பீக்கர்கள், மைக்ரோபோன்கள், மற்றும் ரொக்க தொகைகள் ஆகியவயைம் பறிமுதல் செய்யதப்பட்டதாக குமார் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!