Latestமலேசியா

ஜோகூர் ‘மாமாக்’ உணவகத்தில் எலி; வைரல் வீடியோவால் பெரும் பரபரப்பு

ஜோகூர் பாரு, ஜூன் 24 – ஜோகூர் டாங்கா பேயிலுள்ள (Danga Bay) ‘மாமாக்’ உணவகமொன்றில், எலி உணவுப் பகுதியில் நடமாடிய காணொளி சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து, அந்த உணவகம் இரண்டு நாட்களுக்கு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

உணவக நிர்வாகம் கூறுகையில், எலி எங்கிருந்து வந்தது என்பது தெரியவில்லை என்றாலும், அப்பகுதியில் எலிகள் பெருகும் பிரச்சினை இருப்பதாக தெரிவித்துள்ளது.

மேலும், மாதந்தோறும் பூச்சி மற்றும் எலி ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் கூறியுள்ளது.

அச்சம்பவத்தைத் தொடர்ந்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ள நிலையில், விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாக உணவக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, ரோஜாக் வைக்கப்பட்டிருந்த பகுதியிலிருந்து எலி ஒன்று உணவை எடுத்துச் செல்லும் காணொளி சமூக ஊடகங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!