Latestஉலகம்

டிக் டொக்கை விலக்க அல்லது தடையை எதிர்கொள்ள பைட்டான்ஸை கட்டாயப்படுத்தும் சட்ட மசோதா ; அமெரிக்க நாடாளுமன்றம் நிறைவேற்றியது

வாஷிங்டன், மார்ச் 14 – சுமார் 17 கோடி அமெரிக்கர்கள் பயன்படுத்தும் ஷார்ட்-வீடியோ செயலியின் அமெரிக்க சொத்துக்களை நீக்க, டிக் டொக்கின் சீன உரிமையாளரான பைட் டான்ஸுக்கு (ByteDance) சுமார் ஆறு மாத கால அவகாசம் அளிக்கும் சட்ட மசோதாவை அமெரிக்க மக்களவை நிறைவேற்றியுள்ளது.

அந்த சட்ட மசோதா 352-65 என்ற பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

எனினும், பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வெளிநாட்டு செயலிகளை கையாள சிலர் மாறுபட்ட அணுகுமுறைகளை ஆதரிப்பதால், மேலவையில் அந்த சட்ட மசோதா நிச்சயமற்ற சூழலை எதிர்நோக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

டிக் டிக்கொன் எதிர்காலம், வாஷிங்டனில் மிகப் பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.

காசாவில், இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர்நிறுத்தம் செய்ய கோரி விடுக்கப்படும் அழைப்புகளை காட்டிலும், சில சமயங்களில், தங்கள் அலுவலகங்களுக்கு டிக் டொக் சட்ட மசோதாவை எதிர்த்து விடுக்கப்படும் தொலைப்பேசி அழைப்புகளின் எண்ணிக்கை அதிகம் என அந்நாட்டின் ஜனநாயக மற்றும் குடியரசி கட்சியினர் கூறியுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!