Latestமலேசியா

டைம்ஸ் உயர்க் கல்வி நிலையங்களின் தரப் பட்டியல் கண்டு அதிக உற்சாகம் அடையக்கூடாது – டாக்டர் ராமசாமி

கோலாலம்பூர், ஜூன் 25 – உலகளாவிய ஆய்வில் உலகின் முதல் ஏழு கல்வி நிறுவனங்களில் இரண்டு மலேசியப் பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றதைத் தொடர்ந்து, உயர்க்கல்வி அமைச்சர் ஸம்ரி அப்துல் காதிர் தனது உற்சாகத்தை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டுமென பினாங்கின் முன்னாள் துணை முதலமைச்சர் டாக்டர் ராமசாமி கேட்டுக்கொண்டார்.

மலேசிய அறிவியல் பல்கலைக்கழகமான (USM) மற்றும் மலேசிய தேசிய பல்கலைக்கழகம் UKM) ஆகியவற்றின் கல்விச் சாதனைகள் குறித்துப் பெருமைப்பட வேண்டும் என்றாலும், THE எனப்படும் Times Higher Education பயன்படுத்திய அளவுகோல்கள் விவாதத்திற்கு அப்பாற்பட்டவை என்பது தெளிவாக இல்லை என்று ராமசாமி சுட்டிக்காட்டினார்.

நன்கு நிறுவப்பட்ட பல்கலைக்கழகங்களுக்குச் சாதகமாகப் பாரபட்சமான கல்வி அளவுகோல்களைப் பயன்படுத்துவதற்காக THE அடிக்கடி விமர்சிக்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்.

பயன்படுத்தப்படும் அளவுகோல்களைப் பொறுத்து, அதிகம் அறியப்படாத பல்கலைக்கழகங்கள் தரவரிசையில் முதலிடத்திற்கு உயரக்கூடும், அதேசமயம், சிறந்த இளங்கலைப் பட்டப்படிப்புகளுக்குப் பெயர் பெற்ற பல்கலைக்கழகங்கள் பெரும்பாலும் குறைந்த தரவரிசைகளைப் பெறுகின்றன என்றும் ராமசாமி மேலும் கூறினார்.

ஆங்கிலம் பேசும் நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களை உயர்த்தும் போக்கைக் THE கொண்டுள்ளது என்றும், ஆங்கிலம் பேசாத நாடுகளில் உள்ள கல்வி நிறுவனங்கள், ஆங்கிலம் பேசும் நாடுகளில் உள்ள நிறுவனங்களைப் போன்ற மதிப்பெண்களைப் பெறுவதில்லை என்றும் கூறினார்.

பயன்படுத்தப்படும் அளவுகோல்கள் காரணமாக, கல்விச் சிறப்பு மற்றும் கற்பித்தலில் வலுவான நற்பெயரைக் கொண்ட ஒரு பல்கலைக்கழகம், அவ்வளவாக அறியப்படாத பல்கலைக்கழகங்களிடம் பின்தங்கிவிடக்கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!