Latestமலேசியா

தலைநகரில் பலத்த காற்று; மரங்கள் விழுந்ததில் 14 வாகனங்கள், 3 வீடுகள் சேதம்

கோலாலம்பூர், மார்ச் 29 – நேற்று தலைநகரின் பல பகுதிகளில் ஏற்பட்ட பலத்த காற்றினால், மரங்கள் முறிந்து விழுந்துள்ளதாகத் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்துள்ளது.

தலைநகரில் சுற்றியுள்ள எட்டு இடங்களில் மரங்கள் விழுந்ததாகவும், அவற்றில் பல மரங்கள் வாகனங்களின் மேல் விழுந்தது சேதமைடைந்துள்ளதும் தெரியவந்துள்ளது.

புக்கிட் ஜாலில் விளையாட்டு பள்ளி அருகே விழுந்த மரங்களால் குறைந்தது ஐந்து கார்களும் மேடான் நியாகாவில் ஜாலான் தாசிக் உத்தாமா 6இல் இரண்டு வாகனங்களும் சேதமடைந்தன.

இதற்கிடையில், ஜாலான் ராடின் மற்றும் ஜாலான் 2/127 ஜாலான் கூச்சாய் லாமாவில் மொத்தமாக மூன்று கார்களுடன் பண்டார் பாரு ஸ்ரீ பெட்டாலிங்கில் உள்ள ஜாலான் ராடின் அனுமிலில் நான்கு கார்களும் சேதமடைந்துள்ளன.

அதுமட்டுமில்லாமல், இந்த பலத்த காற்று காரணமாக மூன்று விடுகள் சேதமடைந்துள்ள நிலையில், மின் கேபிள்களில் இடையூறுகளும் ஏற்பட்டிருக்கிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!