Latestஇந்தியா

தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு; விஜய் தலைமையிலான அரசு 144 MLA-க்களின் ஆதரவுடன் வெற்றி

சென்னை, மே 13 – தமிழக சட்டசபையில் தவெக அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்கும் வகையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு, 144 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது.

சட்டசபை இன்று கூடியதும், அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் முன்மொழிந்தார். இதனைத் தொடர்ந்து ஆளும் மற்றும் எதிர்க்கட்சியினர் தங்களது கருத்துகளை பதிவு செய்தனர்.

பின்னர் நடைபெற்ற வாக்கெடுப்பில், தீர்மானத்திற்கு ஆதரவாக 144 உறுப்பினர்கள் வாக்களித்தனர். 22 பேர் எதிராக வாக்களித்த நிலையில், 5 உறுப்பினர்கள் நடுநிலை வகித்தனர். இதையடுத்து, தீர்மானம் வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்தார்.

வாக்கெடுப்பின் போது திமுக உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், விசிக மற்றும் ஐயூஎம்எல் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்தன.

இதன் மூலம் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு சட்டசபையில் தனது பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியை தொடர்கிறது

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!