Latestமலேசியா

தாமான் மேடான் ரமலான் சந்தையில் வியாபாரிகளிடையே மோதல்; எழுவர் கைது

கோலாலம்பூர், மார்ச் 28 – பெட்டாலிங் ஜெயாவில் தாமன் மேடானில் ரமலான் சந்தையில் வர்த்தக இடம் ஆக்கிரமிப்பினால் இரு வியாபாரிகளிடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைலப்பில் முடிந்ததைத் தொடர்ந்து எழுவர் கைது செய்யப்பட்டனர். தர்பூசணி பழச்சாறு விற்கும் பெண் ஒருவருக்கும் Popia விற்கும் ஆடவருக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் இந்த தகராறு ஏற்பட்டது. ஜூஸ் விற்பனையாளரான அப்பெண் தனது வணிகப் பகுதியில் நுழைந்ததாகக் கூறி அவரை Popia வர்த்தகர் இரும்புக் கம்பியால் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டதாக பெட்டாலிங் ஜெயா போலீஸ் தலைவர் Sharulnizam Jaafar தெரிவித்தார்.

அந்த இரு வியாபாரிகளும் ஒருவரையொருவர் நன்கு அறிந்திருப்பதால், அவர்கள் தங்களைது பிரச்சனையை சுமுகமாக தீர்க்க விரும்புவதற்கு முன்பு, அவர்கள் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள்
திருப்தி அடையாததால், நேற்று மாலை 5.30 மணியளவில் ஜூஸ் வியாபாரியின் மருமகளை Popia வியாபாரியின் மகன்கள் தாக்கியுள்ளனர். இதனைத் தொடர்ந்து , குற்றவியல் சட்டத்தின் 148வது பிரிவின்படி விசாரணைக்கு உதவுவதற்காக 20 முதல் 40 வயதுக்குட்பட்ட நான்கு ஆண்களும் மூன்று பெண்களும் நாளை வரை இரண்டு நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என Sharulnizam கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!