Latestமலேசியா

தாய்மொழிப் பள்ளிகளில் தமிழ் மாண்டரின் மொழிகளை பயன்படுத்தும் முடிவை எதிர்த்து இரு அமைப்புகள் கூட்டரசு நீதிமன்றத்தில் விண்ணப்பம்

புத்ரா ஜெயா, டிச 22 – தாய்மொழிப் பள்ளிகளில் தமிழ் மற்றும் மாண்டரின் மொழியை பயன்படுத்துவதற்கு கூட்டரசு அரசியலமைப்பு சட்டம் அனுமதிக்கிறது என்ற முடிவை எதிர்த்து இரண்டு மலாய் முஸ்லிம் இயக்கங்கள் கூட்டரசு நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வதற்கான அனுமதியை பெறுவற்கு விண்ணப்பம் செய்துள்ளன.

மாப்பிம் ‘Mappim’ எனப்படும் இஸ்லாமிய கல்வி மேம்பாட்டு மன்றம் மற்றும் மலேசிய எழுத்தாளர் சங்க சம்மேளனமான ‘Gapena’ ஆகியவை கடந்த மாதம் மேல்முறையீடு நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக முறையீடு செய்வதற்கு கூட்டரசு நீதிமன்றத்தில் லீவ் டு அப்பீல் ‘Leave to appeal’ முறையீட்டை செவ்வாய்கிழமையன்று கூட்டரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளன.

அதேவேளையில் ஏற்கனவே வழக்கு தொடுத்த இதர இரண்டு அமைப்புகளான இகத்தான் முஸ்லிமின் ‘Ikatan Muslimin’ மற்றும் இகடன் குரு -குரு முஸ்லிம் மலேசியா ‘Ikatan Guru -Guru Muslim Malaysia’ ஆகியவை கூட்டரசு நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வதற்கான விண்ணப்பத்தை தாக்கல் செய்வதில் இணையவில்லை.

தங்களது விண்ணப்பத்தில் அரசியலமைப்பு சட்டம் தொடர்பான ஐந்து அம்சங்கள் மற்றும் சட்டம் சம்பந்தப்பட்ட இரண்டு கேள்விகள் முன்வைத்து கூட்டரசு நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வதற்கான அனுமதியை பெறுவதற்கான விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அமெல்டா ஃபுவாட் அபி & ஐடில் ‘Amelda Fuad Abi & Aidil’ நிறுவனத்தின் வழக்கறிஞர்கள் வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளனர். எங்களது வழக்கறிஞர்கள் குழுவுக்கு வழக்கறிஞர் ஹனிஃப் காத்ரி அப்துல்லா தொடர்ந்து தலைமையேற்பார் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்து.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!