Latestசினிமா

திரையரங்குகளை அதிர வைக்க வருகிறது திகில் நிறைந்த ‘இரும்புத் தோட்டம்’; ஆகஸ்ட் 6 முதல் திரையரங்குகளில்

இயக்குநர் ஜயதேவ் ஜெயக்குமார் (Jaydev Jayakumar) இயக்கியுள்ள அதிரடி த்ரில்லர் திரைப்படமான ‘இரும்புத் தோட்டம்’ (Ladang Besi) திரைப்படத்தின் பிரம்மாண்ட Gala ப்ரீமியர் நேற்று மாலை Bukit Jalilலிக் உள்ள TGV Pavilion திரையரங்கில் கோலாகலமாக நடைபெற்றது.

அந்நிகழ்வில் திரைப்படக் குழுவினர், ஊடகவியலாளர்கள், திரையுலக பிரபலங்கள், சிறப்பு விருந்தினர்கள் என பலரும் திரளாக கலந்து சிறப்பித்தனர்.

இயக்குநர் ஜயதேவ் ஜெயகுமார், தயாரிப்பாளர் ஜெகன் ஜான் பீட்டர் அப்படம் குறித்து வணக்கம் மலேசியவிடம் பகிர்ந்து கொண்டனர்.

‘இரும்புத் தோட்டம்’ திரைப்படத்தில் Irfan Zaini, Logavarman Strideran, Marie Dashani Matthews, Mohana Raj, Dhurgaashini S. Vijayan ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். அவர்களுடன் வினோ ஷான், Vino Shan, Dato Geethanjali G., Adli Hafidz, Balan Kash, கலைமாமணி கே.எஸ். மணியம் உள்ளிட்ட பலரும் இணைந்து நடித்துள்ளனர்.

அவர்களில் சிலர் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

திரைப்படத்தின் காலா ப்ரீமியரில் கலந்துகொண்ட பிரபலங்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள், படத்தைப் பார்த்த பின்னர் ஊடகங்களிடம் தங்களது கருத்துகளைப் பகிர்ந்தனர்.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அதிரடி த்ரில்லர் திரைப்படமான ‘இரும்புத் தோட்டம்’, நாளை மறுநாள் ஆகஸ்ட் 6 முதல் நாடு முழுவதும் திரையரங்குகளில் அதிகாரப்பூர்வமாக வெளியாகவுள்ளது.

ஆகவே மக்களே, திரையரங்கிற்குச் சென்று இத்திரைப்படத்தைப் பார்த்து நமது உள்ளூர் தமிழ் சினிமாவிற்கு தொடர்ந்து ஆதரவு வழங்குங்கள்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!