
கங்கார், ஆகஸ்ட் 4 – கடந்த ஜூலை 26ஆம் தேதி கங்காரிலுள்ள தோட்டத்தில் சாக்கு மூட்டைக்குள் கண்டெடுக்கப்பட்ட எலும்புகள் மனித எலும்புகள் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
கங்கார் மாவட்ட காவல்துறை தலைவர் அசிஸ்டன் கமிஷனர் யுஷாரிபுடின் முகமட் யூசுப் (Yusharifuddin Mohd Yusop), இச்சம்பவம் தொடர்பாக திடீர் மரணம் (SDR) என்ற வகையில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
மேலும், இதில் குற்றச்செயல் தொடர்பான அம்சங்கள் உள்ளதா என விசாரணை நடைபெற்று வருவதுடன், உயிரிழந்தவரின் அடையாளத்தை கண்டறியும் முயற்சியிலும் காவல்துறை ஈடுபட்டுள்ளது.
முன்னதாக, புல் மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தோட்டத் தொழிலாளர் ஒருவர் அழுகிய சாக்கு மூட்டையில் எலும்புகள் இருப்பதை கண்டுபிடித்து காவல்துறைக்கு தகவல் வழங்கினார்.



