
புத்ராஜெயா, ஜூன்-18-தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை இன்று முதல் லிட்டருக்கு 30 காசுகள் குறைக்கப்படுவதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி, ஒரு லிட்டர் 4 ரிங்கிட் 67 காசுகளாக விற்கப்படும் டீசல் விலை, இன்று முதல் 4 ரிங்கிட் 37 காசுகளாகக் குறையும்.
அதேவேளையில், கிழக்கு மலேசியாவில் மானிய விலையிலான டீசல் தொடர்ந்து 2 ரிங்கிட் 15 காசுகளாகவே நீடிக்கும்.
இதர எரிபொருள் விலைகளைப் பொறுத்தமட்டில், RON97 பெட்ரோல் விலை லிட்டருக்கு 4 ரிங்கிட் 35 காசுகளாகவும், மானியமில்லாத RON95 பெட்ரோல் 3 ரிங்கிட் 72 காசுகளாகவும் எவ்வித மாற்றமுமின்றி தொடருகின்றன.
மேலும், BUDI95 திட்டத்தின் கீழ் உள்ள RON 95 பெட்ரோல் ஒரு லிட்டர் 1 ரிங்கிட் 99 சென்னாகவே நீடிக்கும்.
இப்புதிய விலை மாற்றம் ஜூன் 24-ஆம் தேதி வரை அமுலில் இருக்கும்.
உலகளாவிய எரிபொருள் சந்தை நிச்சயமற்ற நிலையில் உள்ளதால், பொது மக்கள் தங்கள் பயணங்களைச் சரியாகத் திட்டமிட்டு தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு நிதியமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.



