Latestமலேசியா

துப்பாக்கி ஏந்திய புகைப்படம் வைரல் ; கோத்தா கினாபாலுவில், 15 வயது பதின்ம வயது இளைஞன் கைது

கோத்தா கினாபாலு, மார்ச் 4 – சபா, கோத்தா கினாபாலு, ஜாலான் காயு மடங்கிலுள்ள, ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின், ஜன்னலுக்கு அருகே, துப்பாக்கியை போன்ற சாதனத்தை ஏந்தி நிற்கும் புகைப்படம் வைரலானதை அடுத்து, பதின்ம வயது இளைஞன் ஒருவன் கைதுச் செய்யப்பட்டுள்ளான்.

நேற்று மாலை மணி 5.36 வாக்கில், சம்பந்தப்பட்ட ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பிலுள்ள, வீடொன்றில் அதிரடி சோதனையை மேற்கொண்ட, கோத்தா கினாபாலு போலீஸ் தலைமையகத்தை சேர்ந்த அதிகாரிகள் சிலர், அந்த 15 வயது இளைஞனை கைதுச் செய்தனர்.

இம்மாதம் இரண்டாம் தேதி, காலை மணி ஒன்பது வாக்கில், அவன் கையில் ஆயுதத்துடன் நிற்கும் புகைப்படம் ஒன்று வாட்ஸ்அப்பில் வைரலானது.

அது தொடர்பில், பொது மக்களிடமிருந்து புகார் கிடைத்ததை தொடர்ந்து, அந்த இளைஞன் கைதுச் செய்யப்பட்டதாக, கோத்தா கினாபாலு போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஸ்னர் முஹமட் ஜைடி அப்துல்லா தெரிவித்தார்.

அதனை அடுத்து, அவனது வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனை வாயிலாக, AK47 மற்றும் “பிஸ்டல்” ஆகியவற்றை ஒத்திருக்கும் இரு போலி சுடும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.

அதோடு, அவற்றை கோத்தா கினபாலுவிலுள்ள, பேரங்காடி ஒன்றில் செயல்படும் கடையிலிருந்து, முறையே 158 மற்றும் 54 ரிங்கிட்டிற்கு வாங்கியதையும் அந்த இளைஞன் ஒப்புக் கொண்டான்.

அதன் பின்னர், சம்பந்தப்பட்ட கடையில் மேற்கொள்ளபட்ட அதிரடி சோதனையில், போலி சுடும் ஆயுதங்கள் சில பறிமுதல் செய்யப்பட்ட வேளை ; அக்கடையில் பணிப்புரிபவர்கள் என நம்பப்படும் 19 வயது இளைஞன் ஒருவனும், 15 வயது யுவதி ஒருவரும் கைதுச் செய்யப்பட்டனர்.

1960-ஆம் ஆண்டு சுடும் ஆயுதச் சட்டத்தி கீழ் அவர்களுக்கு எதிராக விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!