Latestமலேசியா

தெருநாய்களை கொல்லாதீர்; ஷா ஆலாம் மாநகர் மன்றத்திற்கு பிராணிகள் சமூக நல இயக்கம் கோரிக்கை

ஷா அலாம், மார்ச் 30 – அடுத்த மாதத்தில் செத்தியா ஆலமில் தெருநாய்களைப் பிடித்து கருணைக்கொலை செய்வதற்காக தன்னார்வலர்களை கயிற்றின் மூலம் நாய்களை பிடிக்கும் திட்டத்தில் ஈடுபடுத்தும் திட்டத்தை மறுபரிசீலனை செய்யுமாறு MBSA எனப்படும் ஷா அலாம் மாநகர் மன்றத்திற்கு விலங்கு உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

500 தெரு நாய்களை பிடிக்கும் நோக்கத்தை ஷா ஆலம் மாநகர் மன்றம் கொண்டுள்ளது. ஏப்ரல் 22 ஆம் தேதி முதல் 24ஆம்தேதிவரை மேற்கொள்ளப்படும் தெரு நாய்களை பிடிக்கும் நடவடிக்கையின்போது ஒவ்வொரு நாய்க்கும் 30 தன்னார்வலர்களுக்கு வெகுமதி அளிக்கப்படும் என ஷா ஆலம் மாநகர் மன்றம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.

இந்த நடவடிக்கைக்காக MBSA உள்ளூர் குடியிருப்பாளர்களுடன் ஒத்துழைக்கிறது, மேலும் சமூகத் தலைவர்கள் நாய்களை பிடிக்கும் பயிற்சியில் உதவ எட்டு தன்னார்வலர்களைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று அந்த நோட்டிஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிடிபட்ட நாய்களுக்கு உரிமை கோர முடியாது என்பதோடு கருணைக்கொலை செய்வதற்காக MBSA பிராணிகள் காப்பகத்திற்கு நாய்கள் கொண்டு செல்லப்படும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மக்கள் தங்கள் நாய்களை உரிமை கோருவதற்கு ஒரு சலுகை காலம் வழங்கப்பட வேண்டும் என்பதோடு பிடிபட்ட நாய்களை கொல்லக் கூடாது என்று ஷா ஆலம் மாநகர் மன்றத்திற்கு PAWS எனப்படும் விலங்குகள் நலச் சங்கத்தின் நிர்வாகி Lim Choon Sun கோரிக்கை விடுத்துள்ளார்.

பிடிக்கப்படும் பிராணிகளை அதன் உரிமையாளர்கள் மீண்டும் மீட்டுவர முடியாத அளவிற்கு இவ்வளவு கடுமையான நடவடிக்கையை ஷா அலாம் மாநகர் மன்றம் எடுக்க வேண்டிய அவசியம் என்ன ஏன் என்றும் அவர் வினவினார்.

ஒருவரின் வீட்டில் இருந்து வெளியே ஓடிய பிறகு நாய் பிடிபட்டால், அவற்றைக் காப்பாற்ற உரிமையாளர்களால் எதுவும் செய்ய முடியாத நிலையை ஷா அலாம் மாநாகர் மன்றம் ஏற்படுத்தியிருப்பது குறித்து லிம் ஏமாற்றம் தெரிவித்தார்.

தெரு நாய்களின் எண்ணிக்கையைக் குறைக்க MBSA மிகவும் மனிதாபிமான நடவடிக்கையை செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!