Latestமலேசியா

பட்டுவாடா செய்ய வேண்டியப் பணத்தை சொந்த பிரசவத்துக்குப் பயன்படுத்தியப் பெண் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்!

மூவார், பிப்ரவரி 19 – ஜொகூர் முவாரில், பணப்பட்டுவாடா சேவை நிறுவனமொன்றின் பணத்தை தனது சொந்த பிரசவத்துக்குப் பயன்படுத்தியப் பெண் இன்று நீதிமனத்தில் நிறுத்தப்பட்டார்.

கடந்தாண்டு ஜூலையில் நிகழ்ந்த அச்சம்பவத்தில் துணை மேலாளாராக தாம் பணிப் புரியும் அந்நிறுவனத்தின் பணத்திலேயே அவர் கை வைத்திருக்கிறார்.

அதுவும் கிட்டத்தட்ட 40 ஆயிரம் ரிங்கிட்டை அவர் ‘அபேஸ் செய்திருக்கிறார்’

எனினும், மூவார் மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கொண்டு வரப்பட்ட அக்குற்றச்சாட்டை 26 வயது அப்பெண் மறுத்தார்.

எட்டாயிரம் ரிங்கிட் மற்றும் ஒரு நபர் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட அப்பெண், ஒவ்வொரு மாதமும் மூவார் காவல் நிலையத்தில் வந்து கையெழுத்திட வேண்டும் என நீதிபதி தீர்ப்பளித்தார்.

மார்ச் 28-ஆம் தேதி வழக்கு மறுசெவிமெடுப்புக்கு வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!