Latestமலேசியா

பந்திங் ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட சடலம் காணாமல் போன பதின்ம வயது பெண்ணுடையது? போலீஸ் சந்தேகம்

காஜாங், டிசம்பர்-31, சிலாங்கூர், பந்திங்கில் உள்ள ஆற்றொன்றில் நேற்று கண்டெடுக்கப்பட்ட சடலம் ஒரு கொலைச் சம்பவமாக இருக்கலாமென போலீஸ் சந்தேகிக்கிறது.

குறிப்பாக டிசம்பர் 19-ஆம் தேதி காஜாங்கில் காணாமல் போன 15 வயது சிறுமியின் சடலமாக அது இருக்கக் கூடும்.

சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேய்ன் ஓமார் கான் (Datuk Hussein Omar Khan) அதனை கோடி காட்டியுள்ளார்.

ஆனால், அழுகிப் போன நிலையிலேயே சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதால், மரபணு பரிசோதனை முடிவுக்குப் பிறகே எதனையும் உறுதியாகக் கூற முடியுமென்றார் அவர்.

Yap Xin Yuan காணாமல் போனதாக டிசம்பர் 20-ஆம் தேதி செராஸ், பத்து 9 போலீஸ் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது.

செராஸ், பத்து 11-ல், கூடைப்பந்து அரங்கில் சிங்க நடனப் பயிற்சி முடிந்து அவள் வீடு திரும்பாததால், அப்புகார் செய்யப்பட்டது.

கடைசியாகப் பார்க்கப்பட்ட போது அவர் சிவப்பு சிற சிங்க நடன உடையிலிருந்தார்.

155 செண்டி மீட்டர் உயரமும் 39 கிலோ கிராம் எடையும், நீண்ட முடியும் கொண்டிருந்தவர், பல் கிளிப்பும் போட்டிருந்தார்.

இந்நிலையில், அச்சடலம் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து விசாரணைக்கு உதவும் இதுவரை மூவர் கைதாகியுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!