Latestமலேசியா

பள்ளியின் நெடுஞ்தூர ஓட்டத்தின்போது மாணவர் மயங்கி விழுந்து மரணம்

கோலாலப்பிலா, ஏப் 19 – தங்குமிட வசதியைக் கொண்ட பள்ளியில் நெடுஞ்தூர ஓட்டத்தை ஓடி முடிக்கும் சமயத்தில் 14 வயது மாணவன் ஒருவன் மயங்கி விழுந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது இறந்தான். இன்று காலையில் தனது பள்ளியின் இதர 700 மாணவர்களுடன் சேர்ந்து 7 கிலோ மீட்டர் தூரம் ஓட்டத்தில் அந்த மாணவன் கலந்துகொண்டதாக Kuala Pilah போலீஸ் துணைத் தலைவர் DSP Syahrul Annuar Abdul Wahab தெரிவித்தார். அந்த ஓட்டப்பந்தயப் போட்டி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியதாக பள்ளியின் ஆசிரியை போலீசில் புகார் செய்தார். அந்த போட்டியின் தூரத்தை முடிப்பதற்கு 50 மீட்டர் தூரம் இருக்கும்போது அம்மாணவன் மயங்கி விழுந்ததாகவும் அம்மாணவனுக்கு CPR முதலுதவி வழங்கியபோதிலும் அம்மாணவன் சுயநினைவுக்கு வரவில்லை. என Syahrul வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.

இதனை தொடர்ந்து பள்ளிக்கு ஆம்புவன்ஸ் வண்டி வரவழைக்கப்பட்டதை தொடர்ந்து அந்த மாணவன் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டான் .அந்த மாணவனை காப்பாற்றுவதற்காக மருத்துவ குழுவினர் சுமார் ஒரு மணிநேரம் முயற்சி மேற்கொண்டும் அம்முயற்சி வெற்றி பெறவில்லையென Syahrul தெரிவித்தார். இதனிடையே இருதயத்தில் துவாரம் இருந்ததற்காக அந்த மாணவனுக்கு 2016ஆம் ஆண்டு தேசிய இருதய சிகிச்சை மையத்தில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக அம்மாணவனின் தந்தை தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!