ஜோர்ஜ் டவுன், ஜூலை 29 – கைகலப்பு தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார் இரு வெவ்வேறு நடவடிக்கையில் துப்பாக்கி மற்றும் தோட்டாவுடன் சில போலி ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர். ஜூருவில் சந்தேகப் பேர்வழி ஒருவன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து 19 மற்றும் 27 வயதுடைய மேலும் மூன்று ஆடவர்களும் பிடிபட்டதாக பினாங்கு போலீஸ் தலைவர் டத்தோ ஹம்சா அகமட் தெரிவித்தார். சுங்கை பக்காப் , கம்போங் பாரு வால்டோர் பகுதியிலுள்ள ஒரு அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் Glock ரக துப்பாக்கியுடன் சில தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அதற்கு முன்னதாக சுங்கை பக்காப்பில் சந்தேகப் பேர்வழி ஒருவனை அவனது வீட்டில் கைது செய்த போலீசார் பல்வேறு போலி ஆயுதங்களையும் பறிமுதல் செய்ததையும் ஹம்சா உறுதிப்படுத்தினார்.
Related Articles
டிக் டோக்கால் தலைமுறை கெட்டு சீரழியும் முன்னர் கடும் நடவடிக்கைத் தேவை – டத்தோ சிவராஜ் வலியுறுத்து
9 hours ago
நிர்வாணப் படங்களை அனுப்பியப் பேராசிரியர்; உயர் கல்வி அமைச்சு மௌனம் காப்பதாக மாணவர் அமைப்பு சாடல்
9 hours ago
Check Also
Close