Latestமலேசியா

பினாங்கில் RM 300 ரிங்கிட் கொடுத்து நாசி கண்டார் உணவு உட்கொண்ட சிங்கப்பூர் ஆடவர்

கோலாலம்பூர், ஜூன் 27 – பினாங்கில் பிரபலமாக விளங்கும் நாசி கண்டார் உணவு இதற்கு முன் வாங்குவதற்கு ஒருவர் 218 ரிங்கிட் செலவிட்டது இவ்வளவு நாட்களாக சாதனையாக இருந்தது. இந்த சாதனையை இப்போது சமூக வலைத்தளத்தில் Tik Tok கில் பிரபலாமான சிங்கப்பூர் ஆடவர் முறியடித்துள்ளார். மீன் தலை உட்பட பல்வேறு கனவாய்களுடன் சிறப்பாக தயாரிக்கப்பட்ட நாசி கண்டாருக்கு ஷெர்மட் நியோ ( Zermatt Neo ) 300 ரிங்கிட் விலை கொடுத்து வாங்கி உட்கொண்டது புதிய சாதனை என நாசி கண்டார் சுலைமான் உணவகம் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளது.

உணவு உட்கொள்வது குறித்து இதற்கு முன் அதிகமான காணொளிகளை வெளியிட்டு பிரபலப்படுத்திவரும் ஷெர்மட் நியோ தங்களது உணவகத்தில் நாசி கண்டார் வாங்குவதற்காக சொந்தமாக உணவுத் தட்டையும் கொண்டு வந்திருந்தார் என அந்த உணவகம் தெரிவித்திருந்தது. நாசி கண்டார் சுலைமான் உணவகத்தில் வாடிக்கையாளர் ஒருவர் நாசி கண்டார் உணவை வாங்குவதற்கு முதல் முறையாக 300 ரிங்கிட் செலவிட்டுள்ளார். இதனை உட்கொள்வதற்கு அவர் இரண்டு மணி நேரம் செலவிட்டுள்ளார். பல்வேறு பதார்த்தங்களுடன் ஷெர்மாட் நியோ ஆர்டர் செய்திருக்கும் புகைப்படங்களையும் நாசி கண்டார் சுலைமான் வெளியிட்டிருப்பது வைரலாகியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!