
புக்கிங் மெர்தாஜாம், ஏப்ரல்-25-பினாங்கு, புக்கிட் மெர்தாஜாமில் நேற்று காலை நிகழ்ந்த கோர விபத்தில், இரண்டு வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
அவனது தாயார் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தனது 3 குழந்தைகளையும் ஒரே மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு பள்ளிக்குச் சென்றபோது இந்த விபத்து நேரிட்டது.
கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள், சாலையோரத்திலிருந்த கல் சுவரில் மோதியதாக போலீஸ் கூறியது.
அதில் தலையில் பலத்த காயங்களுக்குள்ளான இரண்டு வயது சிறுவன், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.
30 வயது தாய் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
அதிர்ஷ்டவசமாக, மோட்டார் சைக்கிளில் இருந்த மற்ற இரண்டு சிறுமிகளில், 7 வயது சிறுமி இலேசான காயங்களுடன் தப்பினார்; 5 வயது சிறுமி காயமின்றி உயிர் பிழைத்தார்.
இச்சம்பவம் குறித்து செபராங் பிறை தெங்கா போலீஸார் மேல் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



