
புத்ராஜெயா, ஏப்ரல்-25-புத்ராஜயாவில் சாலைகளில் சட்டவிரோத superbike பந்தயத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு பேர் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.
31 மற்றும் 33 வயதுடைய இந்த இருவரும், அதி வேகத்தில் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள்களை ஓட்டிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து கைதாகினர்.
இந்தச் ம்பவம் புத்ரா பாலம் அருகே ஏப்ரல் 19 அதிகாலை 12.30 மணியளவில் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
சம்பந்தப்பட்டவர்கள் சமூக ஊடக உள்ளடக்கம் உருவாக்குவதற்காக அங்கு கூடினர் என நம்பப்படுகிறது.
இருப்பினும், இது முழுக்க முழுக்க பந்தயத்திற்காக நடைபெற்றதா என்பது குறித்தும் போலீஸ் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரு மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
வாக்குமூலங்கள் பதிவானதும் இருவரும் போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
தொடர்புடைய மேலும் சிலரை போலீஸார் தேடி வருகின்றனர்.



