
பெங்களூரு, ஆகஸ்ட்-11-இந்தியாவின் பெங்களூரில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டல் அறையொன்றில், 40 வயதுடைய தந்தை ஒருவர் தனது இரண்டு பெண் குழந்தைகளைக் கொலை செய்து, தானும் தற்கொலை செய்ய முயன்ற நெஞ்சை பதற வைக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
10 மற்றும் 5 வயதுடைய இரு சிறுமிகளின் சடலங்கள் நேற்று பிற்பகல் ஹோட்டல் ஊழியர்களால் அறையின் கட்டிலில் கண்டெடுக்கப்பட்டன.
அதே அறையின் கழிவறையில் கழுத்து அறுபட்ட நிலையில் இரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த தந்தை இம்ரான் என்பவரை ஊழியர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.
தனது மனைவியின் நடத்தை மீது கொண்ட சந்தேகமே இதற்குக் காரணம் என்றும், குழந்தைகள் இதுபோன்ற சூழலில் வளர்வதை விரும்பாததால் இச்செயலைச் செய்ததாகவும் அவர் எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள பெங்களூர் போலீஸார், தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



