Latestமலேசியா

பெட்டாலிங் ஜெயாவில், ஆட்டிசம் குறைப்பாடுடைய 6 வயது சிறுவனைத் தாக்கிய குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார் ஆசிரியர்

ஜோர்ஜ் டவுன் , ஜூலை 25 – பிள்ளைகளை தத்தெடுத்துக் கொள்ளும் சட்டவிரோத சேவையை வழங்கிவருவதாக TikTok பயனர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் கூறிக்கொண்டதை தொடர்ந்து செபெராங் ஜெயாவிலுள்ள வீடு ஒன்றில் சமூக நலத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். சமூக வலைத்தளத்தில் வைரலான அந்த உள்ளடக்கத்தை நேற்று காலையில் தாங்கள் கண்டதாக பினாங்கு சமூக நலத்துறையின் இயக்குனர் ஸக்கரியா தாய்ப் ( Zakaria Taib) தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அந்த டிக்டோக்கில் தெரிவிக்கப்பட்ட தொலைபேசி எண்களுக்கு தொடர்புகொண்ட போதிலும் அதற்கு பதில் கிடைக்கவில்லை. பிறகு டிக் டோக் கணக்கில் தெரிவிக்கப்பட்ட முகவரியில் உள்ள வீட்டிற்கு நேரில் சென்று பார்த்தபோது ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஏழு உறுப்பினர்கள் அங்கு இருந்ததாக ஸக்கரியா தெரிவித்தார்.

கடந்த ஏப்ரல் மாதம் முதல் தங்கள் வீட்டின் முகவரியை குறிப்பிட்ட கும்பல் பயன்படுத்தி வந்துள்ளது தங்களுக்கு தெரிய வந்ததாக அவர்கள் கூறியுள்ளனர்.

குழந்தையை எடுத்து வளர்ப்பது குறித்த விவரங்கள் தொடர்பில் விளக்கம் கேட்டு இதுவரை 30 தனிப்பட்ட நபர்கள் அவ்வீட்டிற்கு வந்ததுள்ளனர்.

பிள்ளை தத்தெடுப்பு தொடர்பில் டிக்டோக்கில் வெளியிடப்பட்ட தகவல் உண்மையா இல்லையா என்று தங்களுக்கு தெரியவில்லை என்றும் அவர்கள் கூறியதாக ஸக்கரியா தெரிவித்தார். மேலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த வீட்டின் உரிமையாளரும் இதுகுறித்து போலீசில் புகார் செய்துள்ளதாக கூறப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!