ஈப்போ, ஜூலை-18, கொத்தடிமை முறையில் வேலைக்கமர்த்தப்பட்ட 26 வங்காளதேசிகளை, பேராக் போலீஸ் மீட்டிருக்கின்றது.
பாகான் டத்தோக், ஹூத்தான் மெலிந்தாங், கம்போங் ஸ்ரீ பெர்காசாவில் உள்ள கட்டிடமொன்றில் செவ்வாய்க் கிழமை மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது அவர்கள் மீட்கப்பட்டனர்.
22 முதல் 51 வயது வரையிலான அவ்வாடவர்கள், சம்பளம் எதுவும் கொடுக்கப்படாமல் கட்டாய உழைப்பு முறையில் கொடுமைப்படுத்தப்பட்டு வந்ததாக பேராக் போலீஸ் தலைவர் டத்தோ அசிசி மாட் அரிஸ் (Datuk Azizi Mat Aris) சொன்னார்.
8 நாட்களுக்கு முன்னர் தான் மலேசியா வந்தவர்கள், அருகிலுள்ள தோட்டங்களுக்கு வேலைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
இவ்வேளையில், கொத்தடிமை முறையில் அவர்களை வேலைக்கு வைத்ததன் பேரில் ஒரு வெளிநாட்டவர் உள்ளிட்ட மூன்று ஆடவர்களையும் போலீஸ் கைதுச் செய்துள்ளது.
மனித கடத்தல் கும்பலைச் சேர்ந்த அம்மூவரும், வங்காளதேசிகளின் ‘பாதுகாவலர்களாக’ செயல்பட்டு வந்துள்ளனர்.