போர்டிக்சன், மே-5, 2 குழந்தைகளைப் பெற்றெடுக்கும் அளவுக்கு சொந்தத் தந்தையாலேயே 8 ஆண்டுகளாக தாம் கற்பழிக்கப்பட்டு வந்ததாக 20 வயது மகள் கொடுத்த புகாரின் பேரில், 40 வயதிலான கணவன்-மனைவி நெகிரி செம்பிலான் போர்டிக்சனில் கைதாகியுள்ளனர்.
மே 1-ஆம் தேதி இரவு 11 மணி வாக்கில் அவ்விளம் தாய் போலீசில் புகார் செய்ய, அவளது பெற்றோர் மே 3-ம் தேதி கைதாகினர்.
12 வயதிலிருந்தே தந்தையின் அக்கொடூரச் செயலுக்கு அப்பெண் ஆளாகி வந்திருப்பது தொடக்கக் கட்ட விசாரணையில் அம்பலமானது.
போர்டிக்சன் கம்போங் ச்சுவாவில் உள்ள தனது வீட்டின் அறையில் இவ்வாண்டு வரையில் அது தொடருவதாக தனது புகாரில் அவர் கூறியுள்ளார்.
தனக்கு நேர்ந்த அவலம் குறித்து தாயிடம் எடுத்துக் கூறியும் அவர் கண்டுகொள்ளவில்லை; 2 பிள்ளைகளைப் பெற்றெடுக்கும் அளவுக்குப் போன பின்னரும் கூட தாய் தன் மீது கரிசனம் காட்டவில்லை என புகார் மனுவில் அவர் மேலும் கூறியுள்ளார்.
கைதான தம்பதி, ஏற்கனவே போதைப்பொருள் வழக்கில் சிக்கியிருப்பது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
இருவரும் மேல் விசாரணைக்காக 5 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.