Latestமலேசியா

போர்ட் கிள்ளானில் 17.5 டன் மூக்குப் பொடி பறிமுதல்

கிள்ளான், மார்ச் 29 – மலேசியாவிற்குள் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்டதாக நம்பப்படும் 14. 29 மில்லியன் ரிங்கிட் மதிப்புடைய 17.5 டன் மூக்குப் பொடியை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மார்ச் 18ஆம் தேதி போர்ட் கிள்ளான் வட துறைமுகம் வந்தடைந்த கப்பல் கொள்கலனில் சந்தேகத்திற்குறிய அந்த மூக்குப் பொடி இருந்ததாக சுங்கத்துறையின் மத்திய மண்டல துணை இயக்குநர் Norlela Ismail தெரிவித்தார். அந்த கொள்கலனில் இருந்தது பயன்படுத்தப்பட்ட துணிகள் என சுங்கத்துறையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் எங்களது Scanner பரிசோதனையில் அந்த கொள்கலனில் உள்ளே இருந்தது துணி அல்ல என கண்டறியப்பட்டதாக இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் Norlela Ismail தெரிவித்தார்.

நாங்கள் பறிமுதல் செய்யப்பட்ட 3.32 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 17.5 டன் புகையிலை பொடிக்கான சுங்க வரியின் மதிப்பு 10.97 மில்லியன் ரிங்கிட்டாகும் என அவர் கூறினார். மூக்குப் பொடியைக் கொண்ட அந்த கொள்கலன் தென்ஆசிய நாடு ஒன்றுக்கு உள்நாட்டுச் சந்தைக்காக அனுப்பிவைக்கப்பட்டதாக தெரிகிறது. மூக்கு வழியாக இழுத்து சுவாசிக்கும் மூக்குப் பொடியை பெரும்பாலும் வெளிநாட்டுக்காரர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!