கோலாலம்பூர், ஜூலை-30, காரில் கடைசியாக ஏறிய பெண், இறங்கும் போது உள்ளாடையை (bra) விட்டுச் சென்றதால், தேவையில்லாமல் மனைவியிடம் தான் மாட்டிக் கொண்டு விழித்த சம்பவத்தைப் பகிர்ந்துள்ளார் e-hailing ஓட்டுநர் ஒருவர்.
அந்த உள்ளாடை, சம்பவத்தன்று இரவு கேளிக்கை விடுதியிலிருந்து தாம் கடைசியாக ஏற்றிய மதுபோதையிலிருந்த பெண்ணினுடையதாகத் தான் இருக்குமென வான் ஷாரில் (Wan Syaril) எனும் அந்நபர் facebook-கில் குறிப்பிட்டார்.
வீடு திரும்பி மறுநாள் காலையில் தான் ‘அது’ கண்ணில் பட்டது; அதுவும் என் மனைவியின் கண்களுக்கா ‘அது’ தென்பட வேண்டும்? காரில் bra இருந்தால் மனைவி என்ன நினைப்பார்? என் மனைவியிடம் மாட்டிக் கொண்டு விழித்த பாடு எனக்குத் தான் தெரியும் என அவர் தனது அனுபவத்தைக் கூறியிருக்கிறார்.
இதனால் நான் கேட்டுக் கொள்வது என்னவென்றால், எந்த அளவுக்கு மதுபோதையிலிருந்தாலும், ‘bra’-வையெல்லாம் மறந்தும் e-hailing கார்களில் விட்டுச் செல்லாதீர்கள்;
வீட்டில் மனைவியிடம் எங்களால் பதில் சொல்லி மாளாது என Wan Syaril கூறியது, நெட்டிசன்கள் மத்தியில் சிரிப்பை வரவழைத்தது.