Latestமலேசியா

மனைவியை நோக்கி கணவன் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் KLIA -வில் பெரும் பதட்டம்; ஒருவர் படுகாயம்

கோலாலம்பூர், ஏப்ரல்-14- செப்பாங், KLIA அனைத்துலக விமான நிலையத்தில் இன்று அதிகாலை துப்பாக்கிச் சூட்டு சத்தங்கள் கேட்டதால் சுற்றுப் பயணிகளும் விமான நிலையப் பணியாளர்களும் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

அதிகாலை 1.15 மணி வாக்கில் நிகழ்ந்த அச்சம்பவம் உள்ளூர் பெண்ணொருவரைக் கொலைச் செய்ய அவரின் கணவரே மேற்கொண்ட முயற்சி என தொடக்கக் கட்ட விசாரணைத் தெரிவிக்கிறது.

உம்ரா முடிந்து திரும்பும் யாத்ரீகர்களுக்காகக் காத்திருந்த
மனைவியை நோக்கி அந்நபர் 2 முறை சுட்டதில், தோட்டா குறி தவறி அங்கிருந்த அப்பெண்ணின் மெய்க்காவலர் வயிற்றில் பட்டு அவர் படுகாயமடைந்தார்.

துப்பாக்கியால் சுட்டவர் உடனே அங்கிருந்து எப்படியோ தப்பிச் சென்று விட்டார்.

எனவே துப்பாக்கிச் சூட்டுக்கும் பயங்கரவாத நடவடிக்கைக்கும் தொடர்பில்லை; அது கணவன் மனைவிக்கு இடையில் நிகழ்ந்த எல்லை மீறிய சண்டையே என சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ ஹுசைன் தெரிவித்தார்.

சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டு விட்டார்; தற்போது வட மாநிலமொன்றுக்குத் தப்பியோடியதாக நம்பப்படும் அவரைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக டத்தோ ஹுசைன் கூறினார்.

கொலை முயற்சி மற்றும் சுடும் ஆயுதங்களை வைத்திருந்தது தொடர்பில் அச்சம்பவம் விசாரிக்கப்பட்டு வருகிறது.

அத்துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தால் KLIA-வில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளதைக் காட்டும் காணொலிகள் முன்னதாக சமூக ஊடகங்களில் பரவியது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!