Latestமலேசியா

மறதியில் வீட்டிலேயே கைத்துப்பாக்கியை விட்டுச் சென்ற லாஹாட் டத்து போலீஸ் தலைவர் ; தவறுதலாகச் சுட்டுக் கொண்டு மகள் மரணம்

கோத்தா கினாபாலு, ஏப்ரல்-17, சபா, லாஹாட் டத்து மாவட்ட போலீஸ் தலைவரின் 14 வயது மகள், வீட்டில் தந்தை வைத்திருந்த கைத்துப்பாக்கியால் தவறுதலாக தன்னையே சுட்டுக் கொண்டு பரிதாபமாக உயிரிழந்திக்கின்றாள்.

செவ்வாய்க்கிழமை நண்பகல் வாக்கில் வீட்டின் அறையில் அப்பிள்ளை ரத்த வெள்ளத்தில் இறந்துக் கிடந்தார்.

சம்பவத்தின் போது அவளது தந்தை Asisten Komisioner Dzulbaharin Ismail, லாஹாட் டத்து போலீஸ் தலைமையகத்தில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்தார்.

நேற்று பார்த்து பிஸ்தோலை அவர் வீட்டிலேயே மறந்து விட்டுச் சென்ற நிலையில், அதைக் கையில் எடுத்த மகள் தவறுதலாகத் தன்னையே சுட, தோட்டா பாய்ந்து அங்கேயே உயிர் பிரிந்தது.

அச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தேசியப் போலீஸ் படைத் தலைவர் Tan Sri Razarudin Husain தெரிவித்தார்.

எனவே, யாரும் தேவையற்ற யூகங்களை எழுப்பி நிலைமையை மோசமாக்க வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டார்.

Dzulbaharin கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி தான் Lahad Datu மாவட்ட போலீஸ் தலைவராகப் பொறுப்பேற்றார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!