Latestமலேசியா

மலாக்கா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு குழந்தையின் வீக்கமும் கொப்பளமும் ஏற்பட்டதா? விசாரணை தொடங்கியது

மலாக்கா, ஜூலை 9 – மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற தனது ஒரு மாத குழந்தையின் கையில் வீக்கத்துடன் கொப்பளித்த நிலையில் காணப்பட்டதாக அதன் தாயார் கூறிக்கொண்டார். கடந்த மாதம் ஏற்பட்ட இந்த சம்பவம் குறித்த தகவல் டெலிகிரோம் சமூக வலைத்தளத்தில் வைரலானது. தனது குழந்தைக்கு நெஞ்சு சலி , இரும்மல் இருந்ததோடு குழந்தைக்கு வேகமாக மூச்சு வாங்கியதால் மருத்துமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு குழந்தையை கொண்டுச் சென்றதாக 35 வயதுடைய அப்பெண் சுகாதார அமைச்சுக்கு அனுப்பிய மின் அஞ்சலில் தெரிவித்திருக்கிறார்.

ஜூன் 9 ஆம்தேதி மாலை 4 மணியளவில் குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றதாகவும் மருத்துவர் இரத்தம் எடுப்பதற்காக குழந்தையின் கையில் ஊசி செலுத்தப்பட்டிருந்ததாகவும் அந்த பெண் கூறியிருந்தார். அன்றைய தினம் இரவு 7.30 மணியளவில் வார்டில் சேர்க்கப்பட்ட பின்னர் பொருத்தமான அக்சிஜன் தேவை என்பதால் இதர வார்டுக்கு மாற்றப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார். இரவு 10 மணியளவில் குழந்தைக்கு டிரிப் ஏற்றப்பட்டதாகவும் நீண்ட நேரம் அதன் கையில் கட்டு போடப்பட்டிருந்ததாகவும் அவர் கூறினார். இரண்டு மணி நேரத்திற்கு பிறகு பசியால் குழந்தை அழுததைத் தொடர்ந்து பால் கொடுக்கும்படி தாம் கேட்டுக்கொள்ளப்பட்டதாகவும் அதன் பிறகும் விடியற்காலை 4 மணிவரை குழந்தை அழுதுகொண்டே இருந்தது. அதனைத் தொடர்ந்து கையில் போடப்பட்டிருந்த கட்டை அவிழ்ந்தபோது கை தோள்பட்டைவரை வீங்கிய நிலையில் இருந்ததாகவும் அவர் கூறினார். இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக மலாக்கா மாநில சுகாதாரத்துறை அறிக்கையை வெளியிடும் என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் Ngwe Hee sem தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!