
கோலாலாம்பூர், ஜூன்-9-மலேசிய லாட்டரி குலுக்கலில் பிரம்மாண்ட திருப்பமாக, மெக்னம் 4D ஜேக்போட் 1 பரிசுத்தொகை 30 மில்லியன் ரிங்கிட்டைக் கடந்து, இன்னும் ஜெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே செல்கிறது.
தொடர்ந்து பல குலுக்கல்களாக இந்த மெகா ஜேக்போட்டை யாரும் வெல்லாததால், புதிய உச்சம் தொட்டுள்ள இந்த ஒட்டுமொத்தப் பரிசுத்தொகை, மலேசியர்களின் கோடீஸ்வரக் கனவுகளுக்குப் புதிய சிறகுகளைக் கொடுத்துள்ளது.
நாளை குலுக்கல் நடைபெறும் நிலையில், தற்போது நாடு முழுவதிலும் உள்ள மெக்னம் விற்பனை நிலையங்களில் தங்களுக்குப் பிடித்த எண்களின் சேர்க்கைகளை வாங்க மக்கள் போட்டி போட்டு வருகின்றனர்.
உங்களின் வழக்கமான எண்களாக இருந்தாலும் சரி, அல்லது ‘சிஸ்டம் ப்ளே’ டிக்கெட்டாக இருந்தாலும் சரி, அடுத்த குலுக்கல் உங்களின் வாழ்க்கையையே தலைகீழாக மாற்றும் அதிர்ஷ்டக் குலுக்கலாக அமையலாம்.
எனவே, அடுத்த குலுக்கல் தொடங்குவதற்கு முன்பே உங்களுக்கான அதிர்ஷ்ட டிக்கெட்டுகளை வாங்கி, மலேசியாவின் அடுத்த கோடீஸ்வரராகும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.



